CRPF வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்..,

153

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின் போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது.

அதன்படி வீரர்களுக்கு தோனி ராணுவ தொப்பியை வழங்கினார், தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வழங்கினார். பின்பு ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்ய வந்தனர். அத்துடன் இந்தப்போட்டிக்கான சம்பளத்தை மத்திய பாதுகாப்பு நிதிக்கு வழங்க வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.