வலிமையான ராணுவம் : இந்தியா 4-வது இடம்

1822

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தி, Military Direct’s என்ற ராணுவ இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளன.

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, ராணுவ வீரர்கள் எண்ணிக்கை, மொத்த வான்படை, கடற்படை, தரைப்படை, அணுஆயுத பலம், சராசரி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதில், 100 புள்ளிகளுக்கு 82 புள்ளிகள் எடுத்து சீனா முதலிடத்தில் உள்ளது. 74 புள்ளிகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷ்யா 3-ம் இடத்திலும், 61 புள்ளிகளுடன் இந்தியா 4-ம் இடத்திலும் உள்ளன.

58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5-ம் இடத்திலும், 43 புள்ளிகளுடன் இங்கிலாந்து 9-ம் இடத்திலும் உள்ளன.ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ராணுவ வலிமையில் அந்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

போர் வருவதாக யூகித்துக்கொண்டால், 14 ஆயிரத்து 141 விமானங்கள் கொண்ட அமெரிக்கா வான்வழி போரில் வெற்றி பெறும். 406 கப்பல்கள் கொண்ட சீனா, கடல்வழி போரில் வெற்றி பெறும்.

54 ஆயிரத்து 866 ராணுவ வாகனங்கள் கொண்ட ரஷ்யா, தரைவழி போரில் வெற்றி பெறும் என்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement