இந்தோனேசிய சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது

595

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த 28ம் தேதி 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் சுனாமி தாக்கியது.

இதன் காரணமாக கடலையொட்டி அமைந்திருந்த குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. கட்டிட இடிபாட்டுகளுக்கு நடுவே தேடும் இடமெல்லாம் சடலங்களாக வந்து கொண்டிருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வரும் நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகின்றது.  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தோனேஷியாவின் சும்பா தீவில் நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 5.6-ஆக பதிவாகியுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் இந்தோனேசியாவில் ஏரளாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

16 டன் எடை கொண்ட மருந்துகள், கூடாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் 3 கப்பல்கள் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.