இந்தியாவுக்கு முன்னுரிமை – இலங்கை அரசு

259

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். புதிய அரசின் வெளியுறவு செயலாளராக இலங்கை கடற்படை முன்னாள் தளபதி ஜெயநாத் கொலம்பேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம் என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம் எனவும் கூறினார். தங்கள் மண்ணில் பிற நாட்டுக்கு எதிரான, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான எந்த காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை, சீனா வர்த்தக காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் என்றும், ராணுவ செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாது எனவும் விளக்கம் அளித்தார்.

கொழும்பு துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக, இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்துவோம் என்றும் ஜெயநாத் உறுதியளித்துள்ளார்.