லடாக் எல்லையில் சீன படைகள்.. சாட்டையை சுழற்ற ஆரம்பித்த இந்தியா..

885

லடாக் எல்லையின் சில பகுதிகளில் சீன படைகள் போக்கு காட்டும் நடவடிக்கைக்கு எதிராக இந்திய அரசு சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளது.

இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குச் செல்லும் உடன்படிக்கை இருப்பினும், சீன படைகள் லடாக்கின் சில பகுதிகளிலிருந்து இன்னும் வெளியேறவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் வர்த்தகர்களுக்கு இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை சீன நிறுவனங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு கொள்முதல் பொருட்கள், சேவைகள், தயாரிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கோவிட் 19 கட்டுப்படுத்தும் மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சீனாவின் பிரபல செயலியான டிக்டாக் உள்ளிட்ட 59 App-களுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.