தொடர்ச்சியாக முதலிடம் வகிக்கும் இந்தியா இரண்டாம் இடத்தில் சீனா

460

வீட்டையும் தாய் நாட்டையும் விட்டு பல நாடுகளில் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலைபார்த்து வருகின்றனர். பிற நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர்.

இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆண்டும் இந்தியர்கள் முதலிடத்தை தக்க வைத்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர் பணம் அனுப்பி உள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம் கோடி ஆகும்.

இவ்வாறு பணம் அனுப்புவதில் சீனா 2வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டாலர்கள் அனுப்பி உள்ளனர். மெக்சிகோ 36 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of