தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம்

833

தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக இருந்தது. இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களில் 53விழுக்காடு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் ஐஎஸ், தாலிபான், அல் சபாப் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மாவோயிஸ்ட் இயக்கம் நான்காவது பெரிய தீவிரவாத இயக்கமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 860தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்முகாஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், உயிரிழப்பு 89விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement