மசூத் அசார் விவகாரம்.., தோனி பார்முலாவால் வெற்றி பெற்ற ஐநா சபையின் இந்திய பிரதிநிதி

734

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா சபை நேற்றுமுன்தினம் (மே1-ந்தேதி) அறிவித்துள்ளது.

ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான சையத் அக்பருதினின் விடா முயற்சியால் இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா முயற்சி செய்தபோதெல்லாம், சீனா தனது வீட்டோ பவர் மூலம் தடைபோட்டு வந்தது. இறுதியில் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக ஐநா சபை அறிவித்தது. அதன்பின் பாகிஸ்தான் அரசு அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மசூத் அசார் விசயத்தில் தோனியின் அணுகுமுறையை கடைபிடித்தேன் என்று ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சையத் அக்பருதின் கூறுகையில் ‘‘நான் டோனியின் அணுகு முறையை நம்புகிறவன். எந்த இலக்கை அடைவது ஆனாலும் அதற்கான அதிக நேரம் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கான காலம் கடந்து விட்டது என சொல்லக்கூடாது. அந்த மனப்பான்மையில் முன்கூட்டியே நமது இலக்கை எட்டும் முயற்சிகளை நாம் கை விட்டு விடக்கூடாது’’ என்றார்.

கிரிக்கெட்டில் கூல் கேப்டன் என்று பெயரெடுத்துள்ள தோனி, எந்தவொரு சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகமாட்டார். எப்படியும் வெற்றிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பொறுமை காப்பார். போட்டி கையை விட்டு நழுவுகிறது என்ற பரபரப்பில், தோல்வியடையப் போகிறோம், வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்று நினைக்கமாட்டார்.

பொறுமையாக யோசனை செய்து முடிகளை எடுப்பார். அதற்கு சற்று நேரம் எடுத்தாலும், அந்த முயற்சியை கைவிடமாட்டார். இந்த அணுகுமுறைதான் தோனிக்கு பல வெற்றிகளை பெற வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of