இந்தியா – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெறுகிறது

554

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும், அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்த விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய அம்சமாக இடம்பொறாது என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of