தோனி வாழ்க்கையில் விளையாடும் விதி.., ஒரு நாள் போட்டியில் ‘தோனி’-க்கு டவுட்

604

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு டி20, ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளையும் எதிரணிக்கு பரிசளித்து தொடரை கைப்பற்ற வைத்தது.

இதனைத்தொடர்ந்து இன்று ஐதராபாத்தில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறயுள்ளது. டி20 தொடரை இழந்த இந்தியா அணி ஒரு நாள் போட்டியை நிச்சயம் வென்றாக வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி இந்த தொடரை கொண்டே உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், இந்திய வீரர்களுக்கு இது முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது.அதே போல் ஆஸ்திரேலியா பொருத்தவரை தொடரை வெற்றியில் இருந்து தான் தொடங்க வேண்டம் என கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட போது துரதிஷ்டவசமாக தல தோனி காயம் அடைந்ததால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தோனி விளையாடவில்லை என்றால் ரிஷாப் பன்ட் விக்கெட் கீப்பிங்கை கவனிப்பார் என்று அறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of