ஜடேஜா சுழலில் சிக்குமா ஆஸ்திரேலியா.., தொடரை வெல்லப்போவது யார்?

251

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டியில் இந்தியாவும், அடுத்த இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று தொடர் சமநிலையில் உள்ளதால், டெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகின்றது. தொடக்க வீரர்கள் தங்களின் பெருமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்க ஆரோன் பின்ச்(27) தனது விக்கெட்டை இழந்தார். களத்தில் உஷ்மான் (49), பிடர்(10) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணி 16 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களுடன் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷுக்கு பதிகால ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் இடம்பெற்றுள்ளார். பெஹரண்டார்ஃப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு ஷமியும், சாஹலுக்கு பதிலாக ஜடேஜாவும் இடம்பெற்றுள்ளனர். உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி ஆடும் கடைசி ஒருநாள் போட்டி என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

கேப்டன் கோலி, தொடக்க வீரர் தவான், ரிஷப் பந்த் ஆகியோர் சொந்த ஊரில் களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of