தொடரை வெல்லப்போவது யார்? இந்தியாவா.., ஆஸ்திரேலியாவா..,

492

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் தொடங்கிய இரண்டு டி20 போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்று சொந்த மண்ணில் இந்தியாவை மண்ணைகவ்வ வைத்தது.

இதனைத்தொடர்ந்து 5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடைப்பெற உள்ளது.இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் இந்த தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.

தொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ரன்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

கடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.

இரு அணிகளும் நாளை மோதுவது 136-வது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49-ல் ஆஸ்திரேலியா 76-ல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of