நாளையும் தொடருமா அதிரடி ? இந்தியா vs ஆஸ்திரேலியா

387

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன, ஆஸ்திரேலிய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of