இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது

629

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, சரிவை சமாளித்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றது. நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அடுத்த இரண்டு விக்கெட்களை இழந்தது. பின்னர், 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3 விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தது. இதனிடையே கேப்டன் கோலியும், ரகானேவும அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்திய அணியின் ஸ்கோர்123 ஆக இருந்தபோது, அணியன் கேப்டன் கோலி 58 ரன்களின் அட்டம் இழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட்டுகளை கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.