இங்கிலாந்தை பதம் பார்க்குமா இந்திய பெண்கள் அணி? முதல் டி20

275

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 ஒருநாள் போட்டியையும், 3 டி20 போட்டிகளையும் விளையாடி வருகின்றது. இதில் இந்தியா ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வெற்றியை தன்வசமாக்கிக்கொண்டது. ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்த இந்கிலாந்து அணி டி20 தொடரையாவது கைபற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு நாள் தொடரைப்போல, டி20 தொடரையும் கைப்பற்றியாக வேண்டும் என கடுமையான பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, முதலாவது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் இன்று (காலை 11 மணி) நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக ஸ்மிரிதி மந்தனா அணியை வழிநடத்த இருக்கிறார்.

அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் சில இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை முயற்சி இருக்கும் என்றாலும் தொடரை கைப்பற்றுவதே தங்களது முக்கிய இலக்கு என்று கேப்டன் மந்தனா கூறினார்.

மேலும், கூறுகையில் ‘சிறு வயதில் விளையாடத் தொடங்கியதில் இருந்தே, உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நினைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க விரும்பினேன். அது நடந்து விட்டது. அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது முக்கியம். அதற்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் எனது பிரதான லட்சியம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான்’என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of