வெற்றியுடன் தொடரை முடித்தது இந்திய அணி!

414

வில்லிங்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.கடந்தப் போட்டியைப் போலவே இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 18 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து, சரிந்த அணியை ராயுடுவும், விஜய் சங்கரும் மீட்டனர். சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேதர் ஜாதவ் சிறப்பாக விளையாடி ராயுடுவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.இக்கட்டான நேரத்தில் அணியை மீட்ட ராயுடு 90 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ஜாதவ் 34 ரன்னில் நடையை கட்டினார். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர்களாக விளாசி அசத்தினார். பாண்ட்யா 22 பந்தில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 49.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

253 ரன் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்தது தடுமாறியது. கேப்டன் வில்லியம்சன், லாதம்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். வில்லியம்ஸ் 39, லாதம்ஸ் 37 ரன்களுடன் அடுதடுத்து ஆட்டமிந்தனர்.நியூசிலாந்து அணி 135 ரன்னிற்கு 6 விக்கெட்களை இழந்தது. அதனால், இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீஷம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி தள்ளிப் போனது. 2 சிக்ஸர் 4 பவுண்டர்களுடன் மிரட்டிய நீஷமை தோனி அற்புதமாக ரன் அவுட் செய்தார்.

இதனையடுத்து நியூசிலாந்து அணி தோல்வி உறுதி ஆனது. அந்த அணி 217 ரன்னில் ஆட்டமிழந்தது. இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றதுஇந்திய அணி சார்பில் சாஹல் 3, சமி மற்றும் பாண்ட்யால் தலா இரண்டு விக்கெட்களை எடுத்து அசத்தினர். 90 ரன்கள் எடுத்த ராயுடு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of