விதியை மீறிய நியூசிலாந்து..? தோனி ரன் அவுட் இல்லை..? வெடித்த புது சர்ச்சை!

2334

2019-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் இருந்து. இந்நிலையில் நேற்று நியூசிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 239 ரன்கள் அடித்திருந்த நியூசிலாந்து, இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணியின் போட்ஸ்மேன்கள் 1 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ஜடேஜா, தோனி இறுதிகட்டத்தில் போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி ரன் அவுட் செய்யப்பட்டபோது, வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்கள் இருந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பவர் பிளேயின் போது 5 ஃபீல்டர்கள் மட்டுமே வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கும் நிலையில், கள நடுவர்கள் விதி மீறியதை கவனிக்கத் தவறியதாக கேள்வி எழுந்துள்ளது.

இதனை நடுவர்கள் எச்சரிக்கை செய்திருந்தால் ஒருவேளை பந்தை த்ரோ செய்து ரன் அவுட் செய்த குப்தில் வேறு இடத்தில் பீல்டிங் செய்திருக்கலாம். தோனி அவுட் ஆகி இருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் தோனி ரன் அவுட் ஆகவில்லை, இது நடுவர்களின் தவறு என்று தோனி ரசிகர்கள் இணையதளத்தில் குமுறி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of