வெஸ்ட் இண்டீஸ் அணியை தெறிக்கவிட்ட இந்திய அணி..! – விராட் கோலி செய்த புதிய சாதனை..!

935

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை இந்தியா அடித்து நொறுக்கியது.

இந்தப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 27 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதில் 12 இந்தியா சார்பாகவும் 15 வெஸ்ட் இண்டீஸ் சார்பாகவும் அடிக்கப்பட்டது.
இந்திய கேப்டன் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார். இதுதான் டி 20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோராகும்.


இந்தியா நேற்று 208 ரன்களை சேஸ் செய்தது. இதுதான் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் ஸ்கோராகும்.

இந்தப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம் கோலி(12), டி 20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியா 2017 லிருந்து 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் வெஸ்ட் இண்டீஸோடு விளையாடிய அனைத்து டி 20 போட்டிகளையும் வென்றுள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of