ஜெனிவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோரிக்கை வைத்த இந்திய அரசு

851

இந்திய விமானப்படையின் விமானிஅபிநந்தன் வர்தமான், பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அவரை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டுமென இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இந்திய விமானப்படை கமாண்டோ அபினந்தன், பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பாக உள்ளார் என அவர் கூலாக பேசிய வீடியோ மூலம் அறியமுடிந்தது. இருந்தபோதிலும் போர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதிகளை துன்புறுத்த கூடாது என இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

போர் கைதிகள் குறித்தும் அவர்கள் உரிமை குறித்தும் ஜெனிவா ஒப்பந்தம் கூறுவது என்னவென்பதை இப்போது நாம் பார்க்கலாம்…

* போரில் கலந்து கொள்ளாத எதிர்நாட்டு ராணுவத்தை சேர்ந்தவர்கள்;அதாவது, சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள்,காயம் காரணமாக கைப்பற்றப்பட்டவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள், ஆகியோர்மனிதாபிமானத்துடன், எந்தவித நிற, மத, மொழிபாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும்.

* அவர்களை காயப்படுத்தவோ, ரகசிய தகவல்களுகாக சித்திரவதை செய்யவோ கூடாது.
* கண்ணியக் குறைவு ஏற்படுமாறு திட்டுவதோ, கீழ்த்தரமாக நடத்துவதோ கூடாது

* போர் முடிந்தவுடன், எந்தவித பழிவாங்குதல் நடவடிக்கையும் இல்லாமல்,அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

* பிணையக் கைதியாக பிடித்து வைக்க கூடாது.

* போர்க்குற்றங்களில் ஈடுபட்டவராக இருந்தால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் (IHL) கீழ் வரும் குற்றங்களுக்கு செல்லாது.

* கைதிகளுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, சுகாதாரம், மருத்துவ சேவை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்

* தாங்கள் கைது செய்யும் எதிர்நாட்டு போர் கைதிகளுக்காக ஆகும் இதுபோன்ற செலவுகள் அனைத்தையும், கைது செய்யும் நாடேஏற்க வேண்டும்.

* கைது செய்யப்பட்ட இராணுவவீரர்கள், எதிர்நாட்டு இராணுவத்திடம் தங்களது பெயர், பதவி, பிறந்த தேதி, தனிப்பட்ட இராணுவ அடையாள எண்,ஆகியவற்றை மட்டும் தெரிவித்தால் போதுமானது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of