அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் துணை நிற்கும் | Rajnath Singh

225

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தென்கொரியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அந்நாட்டு பிரதமர் லீ நக்-யோனை ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, ராணுவ கட்டமைப்பை வலுபடுத்துதல் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், தனது பயணத்தின் இறுதி நாளான இன்று ராஜ்நாத் சிங் வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகளின் முக்கிய எல்லையான பான்முஞ்ஜோம் பகுதியை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, 2018-ம் ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் இணைந்து நடவு செய்த மரத்தையும் பார்வையிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of