2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணியின் பந்து வீச்சில் வீழ்ந்தது வெஸ்ட்இண்டீஸ்

507

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அதனை அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இம்று நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ஷிகர் தவான் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட்கோலி, ரோகித் சர்மா உடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தயால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

பின்னர் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ரிஷாப் பண்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய விராட்கோலி 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

42.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. ஷிரேயாஸ் அய்யரின் அதிரடியாக ஆடி 71 ரன் எடுத்து பின்னர் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன் எடுத்தது, 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது, தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களம் இறங்கினர். ஆட்டத்தின் 9.3வது ஓவரில் புவனேஷ்குமார் வீசிய பந்தில் அதிரடி கிறிஸ் கெய்ல் 11 (24) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய ஷாய் ஹோப் 5 (10) ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து ஹெட்மயர் களம் இறங்க ஆட்டத்தின் 12 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது. பின்னர் மழை காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் ஹெட்மயர் 18 (20) ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன், இவின் லீவிஸ்வுடன் ஜோடி சேர்ந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினர்.

இந்திய அணி வீரர் குல்தீப் ஆட்டத்தின் 27.2வது ஓவரில் தனது பந்து வீச்சில் இவின் லீவிஸ் 65 (80) விக்கெட்டை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து இந்திய அணிவீரர் புவனேஷ்வர்குமார் தனது 34 வது ஓவரில் நிகோலஸ் பூரன் 42 (52), ரோஸ்டன் சேஸ் 18 (23) ஆகிய இருவரது விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்காமல் பிராத்வேட் 0 (3), கெமார் ரோச் 0 (3) இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். அதனை தொடர்ந்து காட்ரெல் 17 (18), தாமஸ் 0 (1) என்ற முறையில் விக்கெட்களை இழந்தனர், இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் 13 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of