விளாசிய கோலி.., ஆஸ்திரேலியா காலி

335

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரான் பின்ச் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய வீரர் ரோஹித் ஷர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் சொந்த மண்ணில் முதன்முறையாக டக்அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தவான் 21 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராயுடு சுழற்பந்துவீச்சாளர் லயான் பந்தில் 18 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 75 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதன் பிறகு களமிறங்கிய இளம் வீரர் விஜய் சங்கர் கேப்டன் கோலிக்கு உறுதுணையாக ஆடினார். இவர்கள் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் கோலி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 50வது அரைசதத்தை பதிவுசெய்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த இணை, அணியின் ஸ்கோர் 156 ரன்களாக இருந்தபோது, விராட் கோலி அடித்த பந்து, ஸாம்பாவின் கையில்பட்டு மறுமுனையிலிருந்த ஸ்டம்பில் பட விஜய் சங்கர் துரதிர்ஷ்டமாக ரன்அவுட்டாகி 46 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் வந்த ஜாதவ் 11 ரன்களில் சாம்பாவின் பந்தில் ஆட்டமிழக்க, அனுபவ வீரர் தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இந்திய அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து தடுமாறியது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கேப்டன் கோலி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவருடன் ஜடேஜா இணைந்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். 43-வது ஓவரின் முதல் பந்தில், பவுண்டரி அடித்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 40-வது சதத்தை விராத் கோலி பதிவுசெய்தார். இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு 67 ரன்களை எடுத்த நிலையில், ஜடேஜா 21 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் அதிரடிக்கு ஆட்டத்துக்கு மாறிய கேப்டன் கோலி ஆஸ்திரேலியா பந்துவீச்சை பதம் பார்த்தார். தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 48-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் பந்தில், விராட் கோலி 120 பந்துகளில் 116 ரன்களை எடுத்து ஸ்டோனிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் 3 ரன்களிலும், பும்ரா டக் அவுட்டிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆடம் சாம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்பு 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்கள் தங்களின் அதிரடியை மட்டும் காட்டாமல் தங்களின் தடுப்பாட்டத்தையும் அருமையாக வெளிப்படுத்தினர். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் கடந்த 6 ஆட்டங்களிலும் சொர்ப்ப ரன்களில் வெளியேறினார்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் சற்று நிதானத்துடன் ஆடியும் 37 ரன்களில் குல்திப் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். ஆவரைத்தொடர்ந்து உஷ்மானும் 38 ரன்களில் தெளியேறினர். ஒரு பக்கம் நிதானத்தை காட்டினாலும் மறுபுறம் இந்தியவின் பந்து வீச்சாளர்கள் தங்களின் அதிரடி பந்து வீச்சை வெளிபடுத்தினர்.

ஒடுகட்டித்தில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலியாவால் முடியாமல் போனது, கடந்த ஆட்டத்தில் அதிரடியை காட்டிய மேக்ஸ்வெல்-யை ஒற்றை இலக்கில் வெளியேற்றினர்.

ஒரு கட்டத்தில் இந்திய வெற்றி என்று நிலைக்கு வந்த போது ஸ்டோனிஸ் ரன்குவிப்பு அனைவரையும் பயப்பட வைத்தது. அவரையும் 52 ரன்களில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் அருமையாக வீழ்த்தினார்.

கடைசி 30 பந்துகளுக்கு 24 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது, இந்திய பந்து வீச்சாளர்கள் பதற்றப்படாமல் சிறப்பாக பந்தை வீசினர். தல தோனியை பல கடைசி வெற்றிக்கான விக்கெட்டை தமிழத்தின் சிங்கக் குட்டி விஜய் சங்கர் கைப்பற்றி வெற்றியை இந்தியா வசம் ஆக்கினார்.

இந்த தொடரில் ஆஸ்திரேலியா 3 பந்து மிச்சம் இருக்க தனது அதைத்து விக்கெட்டுகளையும் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of