ஆரம்பம் முதல் அதிரடியை காட்டும் ஆஸ்திரேலியா.., இந்தியாவின் நிலை?

321

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத், நாக்பூரில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி 6 விக்கெட் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்திய அணியும், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியும் தங்களது முழு திறனை வெளிபடுத்தும் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

இதனிடையே பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கும் போட்டிக்கான டாஸ் இரு அணி கேப்டன் முன்னிலையில் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.

பின்பு களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் தங்களின் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். விக்கெட் இழப்பின்றி 14 ஓவர் முடிவிற்கு 75 ரன்களை எடுத்து ஆடிவருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of