வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

513

ராஜ்கோட்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று துவங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் ப்ரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்ரியல் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய புஜாரா, ப்ரித்வி ஷாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணி தற்போது 5 ஓவர்களில் 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.