பறவை மோதி போர் விமானம் விபத்து!

354

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக விமானம் விபத்தில் சிக்கியது.

விமானத்தில் பறவை மோதியதால் விபத்து நேரிட்டுள்ளது. நால் பகுதியில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக விமானம் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலிருந்த விமானி வெளியேறி பாராசூட் மூலமாக தப்பினார்.

மிக்-21 விமானங்கள் அதிகமாக விபத்தில் சிக்குவது தொடர்பாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. மிக் 21 பிசோன் விமானத்தில் சென்றுதான் அபிநந்தன், பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை தாக்கி அழித்தார்.

பாகிஸ்தான் ஏவுகணை வீச்சில் அபிநந்தன் சென்ற விமானமும் சிக்கியது.