குடியரசு தின விழா..! தேசியக்கொடிக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவிய இந்திய விமானப்படை..!

306

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், முப்படை வீரர்கள், டி.ஜி.பி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதைதொடர்ந்து அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அதைதொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதங்கங்களை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

இதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். அந்ததந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியை கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of