இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேலுக்கு அதிபர் விருது

735

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேல் என்ற அமெரிக்கருக்கு, ஆட்கடத்தலைத் தடுக்க சிறப்பாக செயல்பட்டதற்காக அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மினால் பட்டேல், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,வும், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.,வும் படித்தார்.minal patel

ஹூஸ்டன் மேயரின் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு ஆலோசகராக உள்ள மினால் பட்டேல், ஆட்கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை வழங்கி வந்தார்.

கடத்தப்பட்டவர்கள், கொத்தடிமைகளாகவும், பாலியல் அடிமைகளாகவும் மாற்றப்பட்டதை எதிர்த்து அவர் எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலும் பாராட்டப்பட்டன. இந்நிலையில், அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், உயரிய விருதான அதிபர் விருது கடந்தவாரம் வெள்ளை மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of