இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவு.. பெண்களை விமானிகளாக நியமிக்க முடிவு..

818

ராணுவத்தில் உள்ள போலீஸ் பிரிவில், பெண்களை நியமிக்க, 2019ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய விமானப்படையில், அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி, 2018ஆம் ஆண்டு, முதல்முறையாக, மிக் – 21 ரக போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்தார்.

அந்த வரிசையில், இந்திய ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய தலைமை தளபதி எம்.எம்.நரவானே, ராணுவ விமானப் பிரிவின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் களப் பணிகளில், பெண்கள் ஏற்கனவே ஈடுபடுத்தப்படுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பெண் அதிகாரிகளுக்கான விமானம் ஓட்டும் பயிற்சி, வரும் ஜூலையில் துவங்கும் என்றார். ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின், ராணுவத்தில் பெண் விமானிகள் பணி செய்யத் துவங்குவார்கள் என்றும் நரவானே தெரிவித்தார்.

Advertisement