“ஏப்ரல் முதல் வாரத்தில் களமிறங்குகிறது இராணுவம்?” – தீயாய் பரவிய செய்திக்கு இராணுவம் விளக்கம்

1185

ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில், இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தும் என்று கூறி பரவி வரும் தகவல் குறித்து , இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.

இந்த செய்தி போலியானது மற்றும் தீங்கிழைக்கும் தன்மை கொண்டது என்று இந்திய ராணுவத்தின் ADG PI டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

COVID-19 பரவியதிலிருந்து இதுபோன்ற பல செய்திகள் சுற்றி வருகின்றன. மத்திய அரசு நிதி அவசரநிலையை அறிவிக்கும் என்று கூட சில செய்திகளில் கூறப்பட்டது. சில ஊடகங்களில் வெளியான இந்த தகவலை, மத்திய அரசு மறுத்தது.

இந்த நிலையில்தான், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க, ஏப்ரல் 2வது வாரத்தில், இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்படும், உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக, இந்திய ராணுவம், என்சிசி, என்எஸ்சி அதிகாரிகள் குழுவை களமிறக்கும் என்று, அறிவிக்கப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம், ராணுவமே மறுக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது என்றால், அந்த மெசேஜ்களின் போலித்தன்மையை பற்றி அறிந்து கொள்ளலாம்.

https://mobile.twitter.com/adgpi/status/1244544251637010438

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of