சேட்டையை காட்டிய பாகிஸ்தான்..! வாலை ஒட்ட வெட்டிய இந்தியா..! எல்லையில் பதற்றம்..!

436

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்திய எல்லையில் அசாம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருந்தன.

அதற்கேற்றவாறு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement