ஜம்மு எல்லையில் தொடரும் பதற்றம் .

234
border10.3.19

கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலை படைத்தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ரஜோரியின் சுந்தர்பானியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. துப்பாக்கியால் சுட்டும், சிறிய கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of