ஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி!

414

ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்தின் 20 பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக சென்னை அகடாமிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு நவம்பர்-25ல் தொடங்கி நான்கு வார காலப் பயிற்சியாக டிசம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த பெண் இராணுவத்துக்கு அனைத்து விதமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இராணுவத் தலைமை, மனித வளம் மேலாண்மை மற்றும் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.

அதிகாரிகளுக்கு தகவல் தொடர்பு திறன் வகுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது போல் பயிற்சியளிப்பது மூன்றாவது வருடமாகும். இது போல் 2017 மற்றும் 2018 தற்போது 2019 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்றது.

அக்டோபர் 2011-ல் மூலோபாயா கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இரு நாடுகளுகடான உறவை வலுப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of