பெண் ராணுவ அதிகாரி பாலியல் வன்கொடுமை – ராணுவ மேஜர் செய்த வெறிச்செயல்

999

பெங்களூருவில் பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேஜர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

“பெங்களூருவில் உள்ள ஏ.எஸ்.சி மையத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி ராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த விருந்து முடிந்த பிறகு, மேஜர் அமித் சவுத்ரி என்பவர் தன்னுடன் பணியாற்றும் 29 வயதான பெண் அதிகாரியை வீட்டில் விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.

மது போதையில் இருந்த அவர், பழைய விமான நிலைய சாலையில் காரை நிறுத்தி, பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, அதற்கு மறுநாள் இந்த சம்பவம் குறித்து தமது ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இச்சம்பவம் தொடர்பாக விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அமித் சவுத்ரிக்கு மார்ச் 23-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யவில்லை” பெங்களூரு மாநகர கிழக்கு உதவி ஆணையர் ராகுல் குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of