கொரோனா நிவாரணம் – ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கிய இந்தியன் வங்கி

345

இந்தியன் வங்கியில் பணிபுரியும் 46 ஆயிரம் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை சேர்த்து 8 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதிக்கு இந்தியன் வங்கி வழங்குகிறது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, ‘பிஎம் கோ்ஸ்’ என்ற பெயரில் பிரதமரின் அவசர கால நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.  தொடர்ந்து, பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று, அரசியல் தலைவா்கள், பிரபலங்கள், தொழில்துறையினா் என பலரும் நிதி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்காக இந்தியன் வங்கி ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

சுமார் 43 ஆயிரம் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதன் மூலம் 8.10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of