கிரிக்கெட்டில் இதுவரை முறியடிக்க முடியாத சாதனை படைத்த இந்திய ஜாம்பவான் காலமானார்..!

789

இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான பபு நட்கர்னி தனது 86 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணிக்காக பபு நட்கர்னி 1955 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய இவர் 1414 ரன்களும் 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இவரை இன்றளவும் நினைவு வைத்துக் கொள்ளும் விதமாக ஒரு முறியடிக்கப்படாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

1964ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய 32 ஓவர்களில் 27 ஓவர்கள் மெய்டன் செய்து வெறும் 5 ரன்களை மட்டுமேக கொடுத்தார்.

27 மெய்டன்களில் 21 மெய்டன்களை தொடந்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த சாதனை இன்னும் முறியடிக்கபடாமல் உள்ளது. இந்நிலையில் தனது 86 ஆவது வயதில் நேற்று அவர் இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of