எட்ட முடியாத இடத்தில் இந்தியா..! T20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட அபார சாதனை..!

1392

இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே இன்று நடைபெற்ற டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி 203 ரன்கள் அடித்தது.

2-வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 19-வது ஓவரிலேயே 204 ரன்கள் அடித்து, அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த வெற்றியை பெற்றதோடு, புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது.

அது என்னவென்றால், டி20 கிரிக்கெட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 8-வது முறையாக இந்திய 200 ரன்களை தாண்டியுள்ளது.

ஆஸ்திரேலியா இதுவரை 3 முறையும், தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா இரண்டு முறையும் 200 ரன்களை தாண்டியுள்ளது. 2-வது இன்னிங்சில் 200 ரன்களை தாண்டிய அணியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of