“எனக்கும் கோபம் வரும்..” கூல் கேப்டன் அதிரடி பேச்சு..

668

தனக்கும் கோபம் வரும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் முதல் முறையாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தோனி, தானும் எல்லோரையும் போன்ற மனிதன் என்பதால், தனக்கும் கோபம் வரும் என தெரிவித்தார்.

ஆனால் மற்றவர்களை விட கோபத்தை கட்டுபடுத்துவதில் சிறப்பாக இருப்பதால், தனது கோபம் வெளியே தெரியவதில்லை என்றார். பிரச்சனையை ஆராய்வதைவிட அதற்கான தீர்வை தேடுவதையே விரும்புவதாக கூறினார்.

முடிவை நினைத்து பணியாற்றினால் அது அதிக நெருக்கடியை தரும் என்பதால், எப்போதும் முடிவை நினைத்து செயல்பட மாட்டேன் என்று தோனி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of