பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யும் வெற்றிமாறன் பட கதாநாயகி..!

807

நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள், இந்தியாவில் ஆங்காங்கே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட, விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொண்டனர்.

அந்த வரிசையில், தற்போது, கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டேவும் ஒரு தமிழ் நடிகையை திருமணம் செய்யப்போகிறார். அதுவும் வெற்றி மாறன் படத்தில் நடித்த கதாநாயகியை.

நடிகர் சித்தார்த் நடிப்பில், இயக்குநர் வெற்றி மாறன் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய உதயம் என்.எச்.4 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அஷ்ரிதா ஷெட்டியை தான், மணிஷ் பாண்டே திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் நீண்ட நாட்களாகவே நண்பர்களாக பழகி வந்த நிலையில், திடீரென காதல் மலர்ந்துள்ளதாகவும், எனவே இருவீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.