இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு

345

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. புதன்கிழமை அன்று வர்த்தக தொடக்கத்தின் போது 69 ரூபாய் 71 காசுகளாக இருந்து ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 62 காசுகளானது. இதே போன்று செவ்வாய் கிழமை அன்றும் ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்தன.தொடர்ந்து அந்நிய முதலீடு வருவதாலும், உள்ளூர் பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாலும், டாலரை விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனிடையே கச்சா எண்ணெய் விலை 0.27 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றின் விலை 66.85 டாலராக உள்ளது.