“மக்கள் நாட்டின் பொருளாதாரம் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் ” – நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி வேதனை

679

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கலந்துகொண்டார்.

விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்த வீழ்ச்சி இந்தியாவின் பொருளாதார வலிமையற்ற தன்மையைக் காட்டுகிறது.

மக்கள் நாட்டின் பொருளாதாரம் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். தற்போதைய சூழலில் நாட்டின் மிகப்பெரிய மன அழுத்தமாக பொருளாதார நிலை உள்ளது. வங்கித்துறை பெரிதும் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க அரசு ஒரு சிறு முயற்சி கூட செய்யவில்லை.

இது உள்நாட்டை மட்டுமல்லாது வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. அரசு இதுகுறித்து கவலைப்பட வேண்டும். இந்த அரசுக்கு எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதே தெரியவில்லை. சர்வதேச பொருளாதார சூழலில் இந்தியாவின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்றால் உண்மைத் தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of