நாமக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பல்

1375

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், பானு என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

இருவரும் சேர்நது கள்ள நோட்டு அச்சடிக்க திட்டமிட்டு அதற்கான இயந்திரங்களை வாங்கியுள்ளனர். ஆனால் எப்படி கள்ள நோட்டுகளை தயாரிப்பது என்பது தெரியாததால், தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்திரசேகர் என்பவரை பிணையக் கைதியாக பிடித்து, கள்ள நோட்டு அச்சடிக்கும் முறைகளை கற்றுத்தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சந்திரசேகர் உயிருக்கு பயந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் முறைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சுகுமார், பானு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகள், இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement