அமெரிக்கா நீர்வீழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் மரணம்..!

303

ஆந்திராவை சேர்ந்த இளப்பெண் அமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி மரணம்.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த கமலா இவர் மேல்படிப்புக்காக அமெரிக்காவில் சென்று படித்து கொண்டிக்கும் போது அங்கு வேலையும் கிடைத்துள்ளது. அதன் பின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது வருங்கால கணவருடன சென்று திரும்பும் போது வரும் வழியில் உள்ள  பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.

எதிர்பாராத விதமாக கால் சறுக்கி நீருக்குள் மூழ்கியுள்ளனர். கமலா நீருக்குள் முழ்கி இறந்தவிட்ட நிலையில், அவரது வருங்கால கணவரை மீட்புபடையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும் கமலாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு வருகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of