மீனவர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு – மத்திய அரசு

359

மீன்வர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தி உள்ளது. மீன் விற்பனையில் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், மீனவர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன்பிடி, மீன், இறால் வளர்ப்பு தொழில், விற்பனை, பதப்படுத்துதல் உள்ளிட்ட மீன்பிடி  மற்றும் மீன்வளர்ப்புத் தொழிலின் செயல்பாடுகளுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சமூக விலகல், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of