சீனாவிற்கு இன்னொரு இடியை இறக்கிய இந்தியா

944

20 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் தயாரித்து வழங்குவதற்காக, சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

2022 ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து மின்சார மீட்டர்களையும், ஸ்மார்ட் மீட்டராக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 20 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இந்தோனேஷியாவில் இயங்கி வரும் ஹெக்சிங் நிறுவனத்திற்கு, மத்திய அரசு வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் தயாரிக்க  சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் மீட்டர் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அந்நிறுவனம் பூர்த்தி செய்யாததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், லடாக் எல்லை மோதல் விவகாரத்தில், சீனாவுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.