“அது சட்டவிரோதமானது..” டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனம்..!

1083

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஜய் ஷானே, டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், லடாக்கின் தலைமையிடமே லே என்றும், லடாக்கும், ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்களின் உணர்வுகளை டுவிட்டர் நிறுவனம் மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், லே பகுதியை சீனாவின் ஒரு பகுதி போல் காட்டும் வகையில் வரைபடத்தை காண்பித்ததற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அவமதிப்பு செய்யும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, அது சட்டவிரோதமானது என தீர்க்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற செயல்கள், டுவிட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதுடன், அதன் நடுநிலைத்தன்மை மற்றும் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்புவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement