பிரியாணி பிரியர்களா நீங்கள்..! நீங்களும் இந்த லிஸ்டில் இருப்பீர்கள்..? வெளியான அசத்தல் தகவல்..!

535

இன்றைய காலக்கட்டத்தில் இணையதளங்களில் ஆர்டர் செய்து உணவு பொருட்களை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அந்த சேவையை செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரபல உணவு டெலிலரி செய்யும் நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019 ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரையில் இந்தியர்கள் அதிகம் அந்நிறுவனத்தின் செயலியில் ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளில் முதலில் இருப்பது பிரியாணி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நிமிடத்தில் மட்டும் 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், நொடிக்கு 1.6 பேர் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் புதிதாக கணக்கு தொடங்குபவர்களும் முதலில் பிரியாணி தான் ஆர்டர் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக டெசர்ட் வகையில் குலாப் ஜாமுன், பருப்பு அல்வா ஆகிய இனிப்பு வகைகளை இந்தியர்கள் விரும்பி சாப்பிடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of