“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..? காதலர்கள் படிக்கவேண்டிய செய்தி..!

1104

1947-ஆம் ஆண்டு அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்தியா என்ற நாடு உருவாகாமல், அனைத்து மாநிலங்களும் தனித்தனியாகவே இருந்தன. இதனைத்தொடர்ந்தே 1950-ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

பெரும்பாலும் இந்தியாவில் உள்ள மக்கள் நாட்டில் இருக்கும் சட்டங்கள் குறித்து அறிந்திப்பதில்லை. குடியரசு தினமான இன்று, தெரிந்துக்கொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்..,

பெண்களை கைது செய்தல்..!

இந்தியாவில் பெண்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். அவர்களுக்கென்று இந்தியாவில் பல்வேறு ஸ்பெஷல் சட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இது. இந்தியாவில் பெண் போலீஸ் தான் பெண்களை கைது செய்ய வேண்டும். அதுவும், மாலை மணிக்கு மேல் ஒரு பெண்ணை கைது செய்யக்கூடாது. அப்படியே கைது செய்தாலும், அதை மறுப்பதற்கு பெண்களுக்கு உரிமை உண்டு.

பாலியல் புகார்கள்..!

இந்தியாவில் குற்றம் நடைபெற்றால், காவல் நிலைய வரம்புக்கு ஏற்றவாறே புகார் அளிக்க வேண்டும். ஆனால், பாலியல் வன்கொடுமை விவகாரங்களில், பாதிக்கப்பட்ட நபர்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். இதனை ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்று காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யலாம்.

பொது இடத்தில் காதல் ஜோடிகள்!

பொது இடத்தில் காதலர்கள் அத்துமீறுவது ஒரு சில இடங்களில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், சாதாரணமாக பேசி;க்கொண்டு இருக்கும் காதலர்களையும் காவல்துறையினர் விசாரித்து மிரட்டுவது வழக்கம். ஆனால், உண்மையிலேயே இதன் மீது அரசியல் சாசனப்படி எந்த தடையும் கிடையாது. பொது இடத்தில் ஒரு ஜோடி ஆபாசமாக நடந்து கொள்வது மட்டுமே சட்டப்படி குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டிப்பிடித்தல் என்பது வரம்பு மீறுதல் ஆகாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மது அருந்தும் வயது!

குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம். அவர்களின் வாழ்க்கை சிறு வயதிலேயே பாழாகி விடக்கூடாது என்பதற்காக, நம் நாட்டில் மது அருந்துவர்களுக்கு வயது வரம்பு உள்ளது. ஆனால், இந்த சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறும் மாறுபடும். கோவாவில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களும், தமிழகத்தில் 21 வயதிற்கு மேற்பட்டவர்களும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் மது அருந்தலாம் என்று சட்டம் உள்ளது.

சாலை விதிகள் கிடையாது..!

சாலை விதிகள் தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்ட போது, அனைத்தும் மோட்டார் வாகனங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. எனவே சைக்கிள், ரிக்ஷா உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகள் பொருந்தாது. ஆனால், நம் பாதுகாப்புக்காக விதிகளை பின்பற்றுவது அனைவருக்கும் சிறந்தது.

இன்னும் பல்வேறு சட்டங்கள் பொதுமக்களுக்கு அறியப்படாமலும், தெரியப்படாமலும் இருக்கத் தான் செய்கின்றன. இதுகுறித்து பேதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of