மார்ச் முதல் மே வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்

169

இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளில் மார்ச் முதல் மே வரை வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகமாக பதிவாகும்.

பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளிலும் வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும்.

இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் குறைந்த அளவு மட்டுமே வெப்பம் அதிகரிக்கும்.

வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of