‘நீட்’ ரத்து, ‘விவசாய கடன்’ தள்ளுபடி.., அள்ளிக்கொடுக்கும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை

945

நடக்கி இருக்கின்ற நாடாமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தனது அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

அதன் பின்பு பேசிய ராகுல் காந்தி கூறுகையில்,

இந்த தேர்தல் அறிக்கை ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். அதுமட்டுமின்றி, அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை இருக்கும். மேலும் 5 முக்கிய அம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்,

 1. குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் – ராகுல்காந்தி
 2. ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் திட்டத்துக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் – ராகுல் காந்தி
 3. நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – காங். தேர்தல் அறிக்கை
 4. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் – காங். தேர்தல் அறிக்கை
 5. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – காங். தேர்தல் அறிக்கை
 6. இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை – காங். தேர்தல் அறிக்கை
 7. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் – காங். தேர்தல் அறிக்கை
 8. விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் – காங். தேர்தல் அறிக்கை
 9. 5 பெரிய திட்டங்களை கொண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது – ராகுல் காந்தி
 10. விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது.
 11. மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
 12. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனையைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 13. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of