பெட்ரோல் சப்ளையை நிறுத்திய இந்தியன் ஆயில் தவிப்பில் ஜெட் ஏர்வேஸ்

259

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு திட்டங்களையும், சலுகைளையும் அறிவித்து போட்டாபோட்டியில் ஈடுபட்டு வந்த சில தனியார் விமான நிறுவனங்கள் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறது.

அவ்வகையில் தற்போது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. நேற்றைய நிலவரப்படி இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

இதற்கிடையில், ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் நிரப்புவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்னர் அனுப்பிவைத்த பெட்ரோலுக்கு செலுத்த வேண்டிய மிகப்பெரிய தொகையை இந்நிறுவனம் பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், பாக்கி தொகை வராததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அனுப்பும் பெட்ரோல் சப்ளையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இன்று முற்றிலுமாக நிறுத்தி விட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of